close
Choose your channels

விக்ரம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஜிப்ரான்!

Friday, June 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான 'தாரமே தாரமே' என்ற பாடல் விரைவில் வெளியாகவிருப்பதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார். சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளதாகவும் இந்த பாடல் அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம் என்றும் ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 'கடாரம் கொண்டான்' படத்தின் அப்டேட்டுக்கள் நீண்ட காலதாமதத்திற்கு பின் வெளியிடுவதற்காக விக்ரம் ரசிகர்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

விக்ரம், அக்சராஹாசன், லேனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஸ்ரீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.