அடுத்தடுத்து இரண்டு காதல்: இளம்பெண்ணை தாயாருடன் சேர்த்து கொலை செய்த காதலர்

  • IndiaGlitz, [Wednesday,March 11 2020]

தனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற ஆத்திரத்தில் வாலிபர் ஒருவர் காதலியை மட்டுமன்றி அவரது தாயாரையும் சேர்த்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் சமிர்தா. இவருக்கும் விக்ராந்த் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் ஒரு சில நாட்களிலேயே விக்ராந்தை சமிர்தா வெறுக்கத் தொடங்கினார். விக்ராந்தின் நடவடிக்கைகள் சமிர்தாவுக்கு பிடிக்காததே காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சமிர்தாவுக்கு இன்னொரு நபருடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்ராந்த், தனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று முடிவு செய்து அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதனை அடுத்து நேற்று இரவு 11 மணிக்கு சமிர்தாவின் வீட்டில் நண்பருடன் காத்து இருந்தார். சமிர்தா காரில் வந்து இறங்கிய உடன் அவரை பின்தொடர்ந்து சென்ற விக்ராந்த் மற்றும் அவரது நண்பர், சமிர்தாவையும் அவரது தாயாரையும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்து விக்ராந்தும் அவருடைய நண்பரும் சேர்ந்து தான் கொலை செய்தனர் உறுதி செய்தனர் இந்த நிலையில் விக்ராந்த் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவருடைய நண்பர் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை பிடிக்கும் பணி போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து இரண்டு காதலால் இளம்பெண் ஒருவர் தாயாருடன் சேர்த்து கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஹனிமூன் முடிந்தவுடன் மனைவியை வேண்டாமென்ற கணவர்: பெங்களூரில் பரபரப்பு

திருமணம் முடிந்து ஹனிமூன் முடிந்தவுடன் மனைவி அழகாக இல்லை என்று சொல்லி விவாகரத்து கேட்ட கணவர் ஒருவரால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

'மாநாடு' படத்தில் மனோஜ் பாரதியின் கேரக்டர் குறித்த தகவல்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கி வரும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில்

லண்டனில் கணியன் பூங்குன்றனின் வேட்டை: துப்பறிவாளன் 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கி வந்த 'துப்பறிவாளன் 2' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்று முடிந்த நிலையில் விரைவில் சென்னையில்

கமல், ஷங்கர் இல்லாமல் நடந்த 'இந்தியன் 2' படப்பிடிப்பு

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த 'இந்தியன் 2'படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை மீண்டும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானதை பார்த்தோம்.