close
Choose your channels

பால்கனியில் காதலனோடு உல்லாசம்: மாடியில் இருந்து கார் மேல் விழுந்த இளம்பெண்!

Wednesday, September 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பால்கனியில் காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம் பெண் ஒருவர் திடீரென எதிர்பாராத விதமாக பால்கனியிலிருந்து பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தைவான் நாட்டில் உள்ள தைபே என்ற நகரில் கடந்த ஐந்தாம் தேதி இளம்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பால்கனியில் தனது காதலனுடன் உல்லாசமாக இருந்தார். அப்போது துரதிஷ்டவசமாக பால்கனியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். அவர் பார்க்கிங்கில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் ஒன்றின் மீது விழுந்த நிலையில் காரின் மேற்கூரை சுக்குநூறாக நொறுங்கியது.

பால்கனியில் உல்லாசமாக இருந்த இளம் பெண் ஒருவர் திடீரென அரை நிர்வாண கோலத்தில் கார் மேல் கீழே விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கார் மேல் விழுந்து படுகாயமடைந்த இளம் பெண்ணை அவரது காதலர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தற்போது அந்த பெண் சிகிச்சைக்கு பின் குணமாகி வீடு திரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த சிசிடிவி காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.