தம்பி முறை உள்ளவருடன் கள்ளக்காதல்: 4 குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிய இளம்பெண்

  • IndiaGlitz, [Thursday,February 13 2020]

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோ.குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் சென்ட்ரிங் வேலை செய்து வந்த கருணாகரன் சமீபத்தில் ஏழுமலை தன்னுடைய ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரை சந்தித்தார். தண்ணீர் லாரி ஓட்டி வரும் அவர் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்ததால் தன்னுடைய வீட்டிலேயே தங்கிக்கொள்ள அனுமதித்தார். தன்னுடைய மனைவிக்கு ஏழுமலை தம்பி முறை என்பதால் அவர் எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் ஏழுமலையை தனது வீட்டில் தங்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் தனது அக்கா முறை உள்ள வைத்தீஸ்வரியிடம் கொஞ்சம் கொஞ்சமாக காதல் வசனங்கள் பேசி அவரை கரைய வைத்த ஏழுமலை ஒரு கட்டத்தில் வைத்தீஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவருடைய பேச்சில் மயங்கிய வைத்தீஸ்வரி திடீரென 4 குழந்தைகளை தவிக்கவிட்டு அவருடன் ஓடிவிட்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஏழுமலை மற்றும் வைத்தீஸ்வரி ஆகிய இருவரும் மதுரையில் தங்கியிருந்ததை கண்டுபிடித்து இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் வைத்தீஸ்வரிக்கு அறிவுரை கூறி கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய கருணாகரன், மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தைப்பூசத் திருவிழாவின் போது சென்னைக்கு வந்த ஏழுமலை மீண்டும் வைத்தீஸ்வரி மனதில் ஆசை வார்த்தை கூறி கூறியுள்ளார். இதனையடுத்து மீண்டும் வைத்தீஸ்வரி மற்றும் ஏழுமலை ஓட்டம் பிடித்தனர் இதனால் மனமுடைந்த கருணாகரனும் அவருடைய தாயாரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இருவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 4 குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு தம்பி முறை உள்ள இளைஞனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு ஓட்டம் பிடித்த வைத்தீஸ்வரியை அந்த கிராமத்தில் உள்ளவர்கள் வசை பாடி வருகின்றனர்.

More News

விஜய்யின் 'குட்டிக்கதை' ரிலீஸ் ஆகும் அதே நேரத்தில் ரிலீஸ் ஆகும் சிம்பு பாடல்!

தளபதி விஜய் நடிப்பில், அனிருத் இசையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாஸ்டர்' படத்தின் சிங்கிள் பாடலான 'ஒரு குட்டி கதை' என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது

'ஒரு குட்டிக்கதை' பாடல் இப்படித்தான் இருக்கும்: அனிருத் வீடியோ!

விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் 'ஒரு குட்டி கதை' என்ற பாடல் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. விஜய் பாடியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை

சூர்யா ஒரு பதுங்கும் புலி, விரைவில் பாய்வார்! சிவகுமார் ஆவேச பேச்சு

சூர்யா நடித்த 'சூரரை போற்று' திரைப்படத்தின் பாடல் ஒன்று இன்று ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த விழாவில் சூர்யாவின் தந்தை சிவகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:

சரியா சொன்னீங்க விஜய்சேதுபதி: தேசிய விருது பெற்ற கலைஞர் பாராட்டு!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நேற்று தனது டுவிட்டரில் ”போய் வேற வேலைய இருந்தா பாருங்கடா” என்ற ஒரே ஒரு வரி ட்வீட் திரையுலகினர், ரசிகர்கள், அரசியல்வாதிகள்

”போய் வேற வேல இருந்தா பாருங்கடா”: பிரபல இயக்குனரின் அடுத்த பட டைட்டிலா?

தளபதி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திய குறித்து செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகம் ஒன்று 'விஜய் மற்றும் விஜய்சேதுபதி உள்பட பல நடிகர்கள் மதமாற்றத்திற்கு