close
Choose your channels

இன்றைய தலைமுறையின் சில்க்ஸ்மிதா: வைரலாகும் வீடியோ

Saturday, October 12, 2019 • தமிழ் Comments

கடந்த 90ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. அந்த காலகட்டத்தில் இவர் நடிக்காத படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். பெரிய ஹீரோவின் படங்களாக இருந்தாலும் அந்த படத்தில் சில்க் ஸ்மிதாவின் பாடல் இருந்தால் தான் விநியோகிஸ்தர்கள் படத்தை வாங்குவார்கள். இந்த நிலையில் சுமார் 15 ஆண்டு காலம் தமிழ் சினிமாவை ஆட்டி வைத்த சில்க் ஸ்மிதா, கடந்த 1996ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார். 

சில்க் ஸ்மிதா மறைந்து 23 வருடங்கள் ஆன போதிலும் இன்னும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர் என்பதை அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் நேற்று முதல் இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அச்சு அசலாய் சில்க் ஸ்மிதா போன்றே இருக்கும் ஒரு பெண், அந்த வீடியோவில் அடுத்த வாரிசு’படத்தில் சில்க் ஸ்மிதா ரஜினியுடன் டூயட் பாடிய ‘பேசக் கூடாது...’பாடல் பின்னணியில் ஒரு காந்தப்பார்வை பார்க்கின்றார். இவர் மட்டும் சினிமாவுக்கு வந்தால் இன்றைய தலைமுறையின் சில்க் ஸ்மிதாவாக மாற வாய்ப்பு உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz