'பருத்தி வீரன்' பிரச்சனை.. மெளனம் கலைத்த ஞானவேல்ராஜா.. அறிக்கை வெளியீடு..!

  • IndiaGlitz, [Wednesday,November 29 2023]

கார்த்தி நடிப்பில், அமீர் இயக்கத்தில் உருவான ‘பருத்தி வீரன்’ என்ற திரைப்படம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் பிரச்சினை குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா மாறி மாறி பேட்டி அளித்தனர்.

இதனை அடுத்து அமீர் ஆதரவாக திரையுலகினர் திரண்டனர் என்பதும் ஞானவேல் ராஜா தனது குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாரதிராஜா உட்பட திரை உலக பிரபலங்கள் வலியுறுத்தினர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ‘பருத்தி வீரன்’பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதைப்பற்றி பேசியதில்லை, என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன்.

ஆரம்பத்திலிருந்து அவர் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதிலளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

More News

சூப்பர் ஹிட் படத்தின் டைட்டில்.. ஜெயம் ரவி - உதயநிதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நெருங்கிய தோழியாக இருந்தாலும் பூர்ணிமாவை கண்டு கொள்ளாத இந்துஜா.. என்ன காரணம்?

நடிகை இந்துஜா சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோது நெருங்கிய தோழியான பூர்ணிமாவை சரியாக கண்டு கொள்ளவில்லை என்று பூர்ணிமா புலம்பியது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

சர்வாதிகாரியாக மாறிய நிக்சன் .. மழையில் முட்டி போட சொன்னதால் பரபரப்பு..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் கேப்டனாக நிக்சன் இருக்கிறார். அவரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கவும்

சக்திக்கு மீறி தடைகளை தாண்டி வருகிறோம்: 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் குறித்து கெளதம் மேனன்..!

எங்களது சக்திக்கு உட்பட்டும், மீறியும் பல தடைகளை 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ்க்காக  அனைத்தையும் செய்து வருகிறோம் என்று இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் ஹீரோ இவர்தான்: அதிரடி அறிவிப்பு..!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்நிறுவனத்தின்