கோவா நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு

  • IndiaGlitz, [Thursday,March 16 2017]

சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களில் ஒன்று கோவா. இந்த மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 21 தொகுதி கிடைக்கவில்லை. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் பாஜக 13 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றதால் சிறு கட்சிகளின் ஆதரவுடன் முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. இருப்பினும் சட்டமன்றத்தில் மார்ச் 16ஆம் தேதி அரசின் ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சற்று முன்னர் கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் முதல்வர் மனோகர் பாரிக்கர் அரசு வெற்றி பெற்றது. 22 எம்எல்ஏக்கள் முதலமைச்சர் பாரிக்கருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் சுயேட்சை மற்றும் சிறு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் அடங்குவர். அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் 16 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தற்போது எம்.எல்.ஏ ஆக இல்லை என்பதால் அடுத்த ஆறு மாதங்களில் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நிதியமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இன்று முதன்முதலாக தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அஜித் படத்தை இயக்க மறுத்துவிட்டேன். பிரபல நடிகையின் கணவர்

பிரபல நடிகை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் இயக்கிய முதல் படமான 'நீ வருவாய் என' படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்தவர் அஜித்...

அரசியல்ரீதியான பிரச்சனை. கமலுக்கு துணை நிற்போம். விஷால்

கடந்த சில நாட்களாக உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன. கமல்ஹாசனின் பேட்டிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே அரசு விழா ஒன்றில் காட்டமான பதிலளித்தார்...

அடேயப்பா!!! என்ன ஒரு பிரமாண்டம். 'பாகுபலி 2' விமர்சனம்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சற்று முன்னர் இணையதளங்களில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 'பாகுபலி' முதல் பாகத்தையே ஹாலிவுட் படங்களுக்கு இணையான பிரமாண்டம் என்று விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த படம் அதனையும் தாண்டி ஹாலிவுட் படத்தையே மிஞ்சும் அளவுக்கு உள்ளது...

படப்பிடிப்பின்போது பிரபல தமிழ் நடிகர் காயம்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவர் தற்போது 'செம போத ஆகாதே', 'ருக்குமணி வண்டி வருது', 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், 'இமைக்கா நொடிகள்' மற்றும் ஒத்தைக்கு ஒத்தை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்...