தளபதி விஜய்யுடன் மோதும் விக்னேஷ் சிவன்.. ஒரே நாளில் 'கோட்' மற்றும் 'எல்.ஐ.சி?

  • IndiaGlitz, [Sunday,March 31 2024]

தளபதி விஜய் நடிக்கும் ’கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அதே படத்தில் விக்னேஷ் சிவன் தனது ’எல்ஐசி’ படத்தின் டீசரை வெளியிட திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் முதல் கட்டமாக ஏப்ரல் 14-ம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக இது விஜய் பாடிய பாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து தான் விஜய் பிறந்த நாளில் டீசர் மற்றும் ஆகஸ்ட் மாதம் ட்ரைலர் அதனை அடுத்து ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தை வெளியிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் ’எல்ஐசி’ படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் டீசரை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடப்பட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு தகவல்களும் உறுதி செய்யப்பட்டால் ஒரே நாளில் ’கோட்’ மற்றும் ’எல்ஐசி’ ஆகிய படங்களில் அப்டேட்டுகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழ் புத்தாண்டுக்கு அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாக உள்ளதால் ஏப்ரல் மாதம் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்துகள் அடுத்தடுத்து காத்திருக்கிறது.

More News

இளையராஜாவை அடுத்து இன்னொரு பிரபலத்தின் பயோபிக்கில் ஜோதிகா.. டைட்டிலில் சிறு மாற்றம்..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீருக்கு சம்மன்..!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா? 'ஆடுஜீவிதம்' வசூல் தகவல்..!

பிரித்விராஜ் குமாரன், அமலாபால் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவான 'ஆடுஜீவிதம்' என்ற திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான நிலையில் 3 நாட்களில் இந்த படம் மிகப்பெரிய வசூல்

'புதிய பாதை' ரீமேக்.. ஆனால் பார்த்திபன் சொன்ன மெகா ட்விஸ்ட்..!

சூப்பர் ஹிட் ஆன பழைய திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் 33 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திபன் இயக்கிய நடித்த 'புதிய பாதை' படத்தையும் ரீமேக் செய்யப் போவதாகவும்

'தலைவர் 171' படத்தில் ரஜினியின் கேரக்டர் இதுவா? மாஸ் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் 'தலைவர் 171' .