'கோட்' ஓடிடி ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா? விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் சுமார் 3 மணி நேரம் என்று இருந்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதைவிட அதிகமான ரன்னிங் டைம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும்போது இருக்கும் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘கோட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலையும் வாரி குவித்து வருகிறது.
இந்த நிலையில் ‘கோட்’ படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்திற்கு மேல் இருந்தாலும் படம் போவதே தெரியவில்லை என்றும் குறிப்பாக கடைசி 40 நிமிட காட்சிகள் விறுவிறுப்பாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் 3 மணி நேரமே அதிக ரன்னிங் டைம் என்று கோட்’ படத்திற்கு சில விமர்சனங்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகும் போது 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ரன்னிங் டைம் உள்ளது என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய், பிரசாந்த், மோகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் நீளம் கருதி நீக்கப்பட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி அளித்திருந்த நிலையில் தற்போது ஓடிடியில் பார்க்கும்போது அந்த காட்சிகள் எல்லாம் இருக்கும் என்பதால் விஜய் ரசிகர்களுக்கு குஷி ஆகி உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments