close
Choose your channels

Good Bad Ugly Review

Review by IndiaGlitz [ Thursday, April 10, 2025 • தமிழ் ]
Good Bad Ugly Review
Banner:
Mythri Movie Makers
Cast:
Ajith Kumar, Trisha Krishnan, Usha Uthup, Rahul Dev, Kingsley, Roadies Raghu, Pradeep Kabra, Harry Josh, KGF Avinash, Yogi Babu, Prasanna, Prabhu, Priya Prakash, Simran, Tinnu Anand, Sayaji Shinde, Jackie Shroff, Sunil, Arjun Das.
Direction:
Adhik Ravichandran
Production:
Naveen Yerneni, Y. Ravi Shankar
Music:
G. V. Prakash Kumar

'குட் பேட் அக்லி ' ரசிகர்களுக்கு  ஏகே வைத்திருக்கும் மாஸ் விருந்து!

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'குட் பேட் அக்லி'.

உலக கேங்ஸ்டர்களுக்கெல்லாம் மான்ஸ்டராக ஏகே என்கிற ரெட் டிராகன் ( அஜித் குமார்). மனைவி மற்றும் குழந்தைக்கான தனது கேங்ஸ்டர் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு போலீஸில் சரணடைந்து 14 வருடங்களாக ஜெயிலில் இருக்கிறார். இந்நிலையில் ஏகேவின் மகன் விஹான் ஏகேவுக்கு (கார்த்திகேயா தேவ்) ஒரு பிரச்னை வருகிறது. தன் மகனைக் காப்பாற்ற மீண்டும் தனது பழைய வன்முறைகளை கையில் எடுக்கிறார் ஏகே. மகனைக் காப்பற்ற களமிறங்கினாலும் மீண்டும் கேங்ஸ்டர் வாழ்க்கைக்குத் திரும்பிய தன் கணவன் மேல் கோபம் கொள்கிறார் மனைவி ரம்யா (த்ரிஷா). குடும்பத்தால் கட்டுப்பாடு, மகன் மேல் அக்கறை சூழும் கேங்க்ஸ்டர்கள் வியூகம் என அனைத்தும் சேர்ந்து முடிவு என்ன என்பது மீதிக் கதை.

அஜித் குமார் (எ) ஏகே… படமே இந்த ஒரு பெயருக்காக உருவாக்கப்பட்டதாகவே நிற்கிறது. படம் முழுக்க ஏகே ஷோ. மாஸ் காட்டுகிறார், பல கெட்டப்களில் அப்ளாஷ் அள்ளுகிறார், பழைய சாக்லேட் பாயாக நிற்கிறார், பில்லாவாக பின்னிப் பெடலெடுக்கிறார், அடிதடியில் அமர்க்களம் செய்கிறார். அவரது வரலாறுகளை மற்றவர்கள் பேச வீரமும் விவேகமும் ஒருசேர கலந்து மாஸ் வேதாளமாக திரையை தெறிக்க விடுகிறார். ஆம், இந்த வார்த்தைகள் போல் படம் முழுக்க அவரது ரசிகர்களுக்கு சரவெடி பட்டாசாக அவரது பழைய படங்களின் ரிபரசன்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
 
அடுத்து படத்தில் கவனம் ஈர்ப்பவர் அர்ஜுன் தாஸ். அவரது குரலும், உடல் மொழியும் இந்தப் படத்துக்கு இன்னொரு சிறப்பு. ஆதிக்கின் சிறப்பான வில்லனாக இது வரை இல்லாத புது கெட்டப், உடல் மொழியாக அடடே ரகம். குறிப்பாக அஜித் மற்றும் அர்ஜுன் தாஸ் இடையே நிகழும் இடைவேளைக்கு முன்பான உரையாடல் காட்சி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவான பார்வயாளர்களையும் நிச்சயம் கவரும். த்ரிஷா, பிரசன்னா, பிரபு, ஷைன் டாம் சாக்கோ, ஜாக்கி ஷெராஃப் , பிரியா வாரியர், உள்ளிட்ட நடிகர்கள் அத்தனை பேரும் அவர்களுக்கு கொடுத்த வேலையை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள். எனினும் அத்தனை பேருமே அஜித்தின் மாஸ் குறித்து பேசவும் அவர் வரலாறு குறித்து புகழ்ந்து பாடவும் தான் அதிகம் பயன்பட்டிருக்கிறார்கள்.

படத்தின் அடுத்த பலம் பின்னணி இசையும் ரிஃப்ரல் பாடல்களும் தான். ஜிவி பிரகாஷின் அதிரடி பின்னணி இசை ஒரு பக்கம் இன்னொரு புறம் என்பது மற்றும் தொண்ணூறுகளின் பாடல்களின் தொகுப்பு என படத்தில் மாஸ் காட்சிகளுக்கு நூறு சதவீதம் கேரண்டி ஜிவி தான் .

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் கலர்ஃபுல் காட்சிகளுடன் விஷுவல் விருந்து. படத்தின் எடிட்டிங்கில் தன்னையும் ஒரு அஜித் ரசிகராக நிறுத்தியே படத்தொகுப்பு செய்திருக்கிறார். காட்சிகள் பாடல் டெம்போவில்  நடனம் ஆடுகின்றன.

எல்லாம் சரி கதை எங்கே என்றால் ஆளாலுக்கு வராத போனை கையில் எடுத்துக்கொண்டு வெளியே சென்று விடுவார்கள் போல . திரைக்கதையும் அஜித் மேனியாவாக அமைக்கப்பட்டுள்ளது. எனினும் படத்தின் டிரெய்லர் , புரமோஷன் , பேட்டி என எங்கேயும் கதை குறித்து படக்குழு எவ்வித நம்பிக்கையும் கொடுக்கவில்லை. மேலும் இது ரசிகர்களுக்கான படம் என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்தி விட்டார்கள் என்பதால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்வது நல்லது.

மொத்தத்தில் ' குட் பேட் அக்லி' அஜித் ரசிகர்களுக்கு வெரி குட் , கதை, திரைக்கதை எனக் கேட்பவர்களுக்கு பேட், கல்ட் கிளாசிக் , உலக விருது படங்கள் பார்ப்போருக்கு அக்லியாக நீண்ட விடுமுறை காலத்தை கொண்டாட ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்.

Rating: 3.25 / 5.0

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE