ஜிவி பிரகாஷ் இசையில் அனிருத் பாடல்.. 'குட் பேட் அக்லி' செகண்ட் சிங்கிள் அப்டேட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி மற்றும் ப்ரோமோ வீடியோ இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்றுமுன் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘குட் பேட் அக்லி’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என்றும், "God Bless You" என்று தொடங்கும் இந்த பாடலை ஜி.வி. பிரகாஷின் இசையில் அனிருத் பாடியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பாடலை ராகேஷ் எழுதி இருப்பதாகவும், இதன் ராப் பகுதியை பால் டாபா எழுதி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்தில் இன்னொரு பிரபல இசையமைப்பாளர் பாடல் பாடுவது கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில், தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் ஜி.வி. பிரகாஷின் இசையில் அனிருத் பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 19 வினாடிகள் கொண்ட இந்த பாடலை பதிவு செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Two music powerhouses join hands for our AK 💥💥💥 #GoodBadUgly Second Single #GodBlessU out tomorrow ❤️🔥
— Suresh Chandra (@SureshChandraa) March 29, 2025
Here's the promo!
▶️ https://t.co/iIp3jaTQfq@anirudhofficial vocals in a @gvprakash musical 🔥
Lyrics by #Rokesh
Rap by #PaalDabba#GoodBadUgly Grand release on 10th… pic.twitter.com/EBPSA0O772
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments