பிரம்மாண்டமான அரங்கத்தில் ஜீவா படத்தின் படப்பிடிப்பு 

  • IndiaGlitz, [Monday,May 21 2018]

'கலகலப்பு 2' படத்தின் வெற்றியை அடுத்து கோலிவுட்டில் மீண்டும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தியுள்ள நடிகர் ஜீவா தற்போது 'கொரில்லா' மற்றும் 'கீ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

இதில் 'கொரில்லா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் ‘கொரில்லா ’படத்தில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஷாலினி பாண்டே, ராதாரவி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசும் போது, ‘இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள் இணைந்து நடிக்கும் இந்த கொரில்லா படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்தது.

இதன் இறுதி கட்ட படபிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின் உழைப்பில் சென்னையின் புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அரங்கத்தில் கடும் கோடையையும் பொருட்படுத்தாமல் நடிகர்கள் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் டத்தோ ராதாரவி ஆகியோருடன் ஆயிரம் துணை நடிகர் நடிகைகள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நடிகர் ராதாரவி அவர்களின் வழிகாட்டல் படக்குழுவினருக்கு பேருதவியாக அமைந்திருக்கிறது. இந்த படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தவுடன் ‘கொரில்லா ’ படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்படும். ’ என்று கூறியுள்ளார்.
 

More News

அஞ்சலியின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்

விஜய் ஆண்டனியுடன் அஞ்சலி நடித்த 'காளி' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2',

விஜய் ஆண்டனியின் 'காளி' ஓப்பனிங் வசூல் எப்படி?

விஜய் ஆண்டனி, அஞ்சலி நடிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கிய 'காளி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த படத்தின் முதல் வாரயிறுதி சென்னை வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

2வது வாரத்திலும் கலக்கல் வசூல் தந்த 'இரும்புத்திரை'

விஷால், அர்ஜூன், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' கடந்த 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

கமல் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை: ரஜினிகாந்த்

ரஜினிகாந்த இன்று போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் ரஜினி மகளிர் அணி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

கோலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல காமெடி நடிகரின் 4 வயது மகள்

கோலிவுட்டில் திரைநட்சத்திரங்கள் அறிமுகமாவது புதியது இல்லை. சிவாஜி கணேசனின் வாரிசுகள் முதல் நடிகை மீனாவின் மகள் வரை கோலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகள் தான்.