அரசு அறிவிப்பால் 'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Monday,October 21 2019]

விஜய் நடித்த ’பிகில்’ மற்றும் கார்த்தி நடித்த ’கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது. அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிறு அன்று தீபாவளி என்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் நல்ல வசூல் கிடைக்கும் என இரு படக்குழுவினர்களும் எதிர்பார்த்த நிலையில் அரசு அதிரடியாக தீபாவளிக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை என அறிவித்துள்ளது

அதாவது தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28ஆம் தேதி திங்கட்கிழமையும் விடுமுறை நாள் என்றும், அதற்கு பதிலாக விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9ஆம் தேதியை பணி நாளாக அறிவித்து அரசாணை அறிவித்துள்ளது

இதனை அடுத்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் தீபாவளிக்கு வெளியாகும் பிகில் மற்றும் கைதி படக்குழுவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அறிவிப்பால் வெள்ளி, சனி, ஞாயிறு, மற்றும் திங்கள் ஆகிய 4 நாட்கள் அதிகபட்சமான வசூல் இந்த இரு படங்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

அமலாபாலை அடுத்து நிர்வாணமாக நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை

நடிகை அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த 'ஆடை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் என்பவர் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது

தனுஷின் அடுத்த படத்தில் பிரபல மலையாள நடிகர் 

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறா

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர்: சஸ்பென்ஸை உடைத்த கார்த்தி

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த 'சூரரைப்போற்று' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவர் அடுத்ததாக ஹரி, வெற்றிமாறன் மற்றும் சிறுத்தை சிவா

விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்: பூ தொழிலாளர்கள் போராட்டம்

கடந்த சில வருடங்களாக விஜய் படம் பிரச்சனை இன்றி வெளியானதாக சரித்திரம் இல்லை. அந்த வகையில் 'பிகில்' திரைப்படமும் ஆரம்பித்ததில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன

கொள்ளையன் முருகனை நேரில் சந்தித்து நன்றி கூறிய லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்

சமீபத்தில் திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் சுவரில் ஓட்டை போட்டு சில கொள்ளையர்கள் கோடிக்கணக்கான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர் என்பது தெரிந்ததே