ஊரடங்கு நேரத்திலும் முதலீட்டில் கலக்கும் தமிழக அரசு!!! தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை!!!

 

கொரோனா தாக்கத்தால் இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மாநில அரசுகளும் நேரடியாக வெளிநாடு, உள்ளூர் வர்த்தகத்தை ஈர்க்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதையடுத்து தேசிய அளிவில் ஈர்க்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த முதலீடு தொகையைப் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்தப் பட்டியலில் தமிழகம் அதிகபடியான முதலீட்டை பெற்று தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த மார்ச் 23 இரவு முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதில் பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும் இயல்புநிலை இன்னும் மாறாமல் இருக்கிறது. ஊரடங்கு காலத்திலும் பொருளாதாரத்தைத் திடப்படுத்த வேண்டும் என்பதற்காக அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது ரூ.18,236 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை ஈர்த்து அத்திட்டங்களை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தேசிய அளவில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக உயர்ந்து இருக்கிறது.  

இந்தியாவில் கடந்த ஏப்ரல்-ஜுன் வரையில் ரூ. 97,859 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் 1241 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருககிறது. அதன் மூலம் ரூ.18,236 கோடி முதலீடுகளுக்கு தமிழகத்தில் அனுமதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்தொகை இந்திய அளவுடன் ஒப்பிடும்போது 18. 63 விழுக்காடு என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தப்படியாக மத்தியப்பிரதேசம் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.11,228 கோடியே 80 லட்சம் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. அடுத்தப்படியாக உத்திரபிரதேசம் ரூ.8 ஆயிரத்து 867 கோடியே 80 லட்சம் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவை பொறுத்த அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்து முதல் இடத்தை பிடித்து இருப்பதால் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிரதமர் மோடியை அடுத்து திடீரென லடாக் சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

கடந்த வாரம் பிரதமர் மோடி லடாக் சென்று ராணுவ வீரர்களிடையே உரையாற்றினார் என்பதும், அப்போது அவர் ராணுவ வீரர்களுக்கு ஒரு திருக்குறளை கூறி ராணுவ வீரர்கள் அனைவரும்

சிட்டுக்குருவிக்காக பைக்கை விட்டுக்கொடுத்த பெண்: நவீன பாரி வள்ளல் என பாராட்டு

பாரி வள்ளல் என்ற மன்னன் முல்லைக் கொடி ஒன்று படர்வதற்கு கொழு கொம்பின்றி இன்றி தவித்த நிலையில் தன்னுடைய தேரை தந்த வள்ளல் தன்மை குறித்து சங்கத்தமிழில் கூறப்பட்டுள்ளது

சமந்தாவை ஓவர்டேக் செய்த பூஜா ஹெக்டே: பனிப்போர் தொடர்வதால் பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளான சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவருக்கும் பனிப்போர் நடந்தது என்பது தெரிந்ததே

வொர்க் ஃபிரம் ஹோமுக்காக சொந்த ஊர் வந்தவர் ஜெயிலுக்கு போன பரிதாபம்: கள்ளக்காதலியால் விபரீதம்

சென்னையிலிருந்து வொர்க் ஃபிரம் ஹோமுக்காக சொந்த ஊர் வந்தவர் கள்ளக்காதலியால் பரிதாபமாக சிறைக்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கணவர் என கூறி கள்ளக்காதலனுடன் கொரோனா தடுப்பு முகாமில் தங்கிய பெண் போலீஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஒருவர் தனிமைபடுத்தபட்ட அறையில் கணவர் என கூறி கள்ளக்காதலனை வரவழைத்து தங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது