அஜித், விஜய்க்கு கைதட்டுவதற்கு பதிலா இவங்களுக்கு கைதட்டுங்க: கவர்னர் பேச்சு


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித், விஜய்க்கு கை தட்டுவதற்கு பதிலாக இவர்களுக்கு கை தட்டுங்கள் என புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் ’மகாத்மா காந்தி’ என்ற கார்ட்டூன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ’மகாத்மா காந்தி’ படத்தின் குறுந்தகட்டை வெளியிட்ட புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியபோது, ‘நடிகர் அஜித்துக்கு கை தட்டுவதை விட அஹிம்சாவாதி காந்திக்கு கை தட்டுங்கள் என்றும் நடிகர் விஜய்க்கு கை தட்டுவதற்கு பதிலாக விடுதலை பெற்றுத்தந்த வ.உ.சிக்கு அதிகம் கைதட்ட வேண்டும் என்றும் கூறினார்.
அதற்காக அஜித், விஜய்க்கு கை தட்ட வேண்டாம் என்று தான் கூறவில்லை என்றும் அவர்களுக்கு கை தட்டுவதை விட அதிகமாக காந்திக்கும் வ.உ.சிக்கும் கைதட்டுங்கள் என்றுதான் நான் கூறுகிறேன் என்றும் அவர் கூறினார். இந்த விழாவில் நடிகர் ராஜேஷ் கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.