கல் சிலைக்கு ரூ.2500 கோடி, உயிருள்ள விவசாயிகளுக்கு வெறும் ரூ.1750 கோடியா?

  • IndiaGlitz, [Wednesday,March 29 2017]

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை மத்திய அரசு இந்த போராட்டத்தை இதுவரை சீரியஸாக கண்டுகொள்ளவில்லை. ஒருசில அமைச்சர்கள், போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று வார்த்தை அளவில் கூறி வருகின்றார்களே தவிர செயலில் ஒன்றுமில்லை.

மேலும் தமிழக அரசு, மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,595 கோடி வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால் மத்திய அரசோ முதல்கட்ட தவணையாக ரூ.1748.28 கோடி அதாவது வெறும் 5% மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மும்பையில் உள்ள அரபிக்கடலில் உருவாகவுள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு ரூ.3600 கோடி ஒதுக்கிய மத்திய அரசு முதல்கட்ட பணிகளுக்காக ரூ.2500 கோடி அதாவது சுமார் 70% தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது.

மராட்டிய மன்னன் சிவாஜியின் கல்சிலைக்கு காட்டும் கருணையை கூட தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் மீது மத்திய அரசு காட்டாதது ஏன்? என்பதே தமிழக மக்கள் அனைவரின் கேள்வியாக உள்ளது. மத்திய அரசு தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகாமல், தமிழகமும் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை நினைவில் வைத்து தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

More News

அல்லு அர்ஜூன் அடுத்த படத்தில் ஆக்சன் கிங்

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரின் விருப்பமான நடிகர்களில் ஒருவராக ஆக்சன் கிங் அர்ஜூன் திகழ்ந்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் வில்லனாகவும் நடித்து வரும் அர்ஜூன் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார&#

கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த பட நாயகன் அறிவிப்பு

கமல், ரஜினி உள்பட பிரபல நடிகர்களின் படங்களை இயக்கி கடந்த பல வருடங்களாக கமர்ஷியல் மற்றும் வெற்றி பட இயக்குனராக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் என்பது அனைவரும் அறிந்ததே...

விஜய்க்கு அடுத்த இடத்தில் பிரபாஸ். 'பாகுபலி 2' விழாவில் வெளியான ரகசியம்

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'பாகுபலி 2' திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்ப்பதால் பிரபாஸின் மார்க்கெட் தற்போதே எகிறியுள்ளது....

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐடி ஊழியர்கள். முழு விபரம்

தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடம் நடத்தி வருகின்றனர். முதலில் ஒரு குழுவாக ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ரஜினியின் '2.0' படத்தின் முக்கிய பணி முடிந்தது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது...