close
Choose your channels

மைனாவிடம் காதலை வெளிப்படுத்திய ஜிபி முத்து.. விக்ரமன் அடித்த செம கமெண்ட்

Friday, January 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 96 வது நாளாக இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே மீதம் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எவிக்ட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி ஆகி உள்ளனர் என்பதும் இதனால் பிக்பாஸ் வீடு களைகட்டி உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் மீண்டும் என்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவரது காமெடியால் கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீடே கலகலப்பாக உள்ளது. இவர் இந்த நிகழ்ச்சியில் முழுவதும் இல்லாமல் போய்விட்டாரே என்ற ஏக்கம் பார்வையாளர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கம்போல் அமுதவாணன் ஒரு காட்சியை கூறி மைனா மற்றும் ஜிபி முத்து ஆகிய இருவரும் நடிக்க வேண்டும் என்று கூறுகிறார். நீங்கள் இருவரும் காதலிப்பது போன்ற ஒரு காட்சியில் நடியுங்கள் என அமுதவாணன் கூற அப்போது ஜிபி முத்து தனது காதலை மைனாவிடம் வெளிப்படுத்துகிறார்.

ஜிபி முத்து சொன்ன எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட மைனா அதன்பிறகு ’காதலிப்பதற்கு உங்களுக்கு தெரிந்த பையன் யாராவது இருந்தால் சொல்லுங்கள்’ என்று கூற அப்போது விக்ரமன் ’ஜிபி முத்து பையனே இருக்கிறாரே’ என்று கமெண்ட் அடிக்க சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரிப்பதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.