ஜிபி முத்து கொலை மிரட்டல் விடுகிறார்....! காதல் சுகுமார் போலீசில் புகார்....!

  • IndiaGlitz, [Thursday,August 05 2021]

இணைய பிரபலமான ஜிபி. முத்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக காதல் சுகுமார் போலீசில் புகாரளித்துள்ளார்.

காதல், திருவிளையாடல் ஆரம்பம் போன்ற ஒருசில படங்களில் துணை நடிகராக நடித்தவர் தான் சுகுமார். இன்று சென்னை காவல் ஆணையத்தில் புகாரளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் பேசியதாவது,
கொரோனா காலங்களில் குழந்தைகள் போன் வழியாக கல்வி கற்கிறார்கள். ஆனால் சமூகவலைத்தளங்களில் பிரபலமாக உள்ள இலக்கியா, ஜிபி முத்து போன்றவர்கள் தவறான, ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் மேல் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுசெயலாளர் ஏழுமலை, டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். இது பற்றி ஊடகங்களில் நானும் என்னுடைய கருத்தை தெரிவித்திருந்தேன். இதனால் நெல்லை சங்கர், சேலம் மணி மற்றும் ஜிபி முத்து உள்ளிட்டோர் இணையம் வழியாக எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.

ஆபாச வீடியோக்கள் நிறைந்த இவர்களின் சமூக வலைதள பக்கங்களை முடக்க வேண்டும். கொலைமிரட்டல் விட்டவர்கள் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகுமார் சார்பாக கூறப்பட்டுள்ளது.
 

More News

மெல்போர்ன் விருதுக்கு தேர்வாகியுள்ள சூர்யாவின் சூப்பர்ஹிட் படம்!

சூர்யா நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்று மெல்போர்ன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

இவர்கள் மூவரும் நாணயத்தின் மூன்று பக்கங்கள்: 30 ஆண்டு திரையுலக வாழ்வு குறித்து தல அஜித்!

தல அஜித் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் கடந்த சில நாட்களாக இதனை கொண்டாடி வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு இனிமையான தகவல்: சீசன் 5 எப்போது?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது? என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது அது

மிஷ்கின் படத்தில் இணைந்த 'சார்பட்டா பரம்பரை' நடிகர்!

பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த 'சார்பட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நடித்த ஆர்யா மட்டுமின்றி பசுபதி, துஷாரா

இடதுகால் தசைநார் சேதம்: 21 ஆண்டுகளாக சிகிச்சை செய்யாமல் இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்!

இடது காலில் தசைநார் சேதமடைந்த நிலையில் அந்த அதற்கு 21 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் சிகிச்சை செய்யாமல் இருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.