கொரோனாவிற்கு பலியான கிராமி விருது பெற்ற பிரபலம்: ரசிகர்கள் அதிர்ச்சி

உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர் முதல் பாமரன் முதல் பதவியில் இருப்பவர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி தாக்கி வருகிறது என்பதும் இதில் பல பிரபலங்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதும் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் ஆகும்.

இந்த நிலையில் கொரோனா வைரஸால் ஒருசில ஹாலிவுட் பிரபலங்களும் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் பெனடிக் என்பவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலைய்ல் தற்போது மற்றொரு ஹாலிவுட் பிரபலம் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்

ஹாலிவுட்டை சேர்ந்த பாடகர் மற்றும் பாடலாசிரியருமான ஜான்பிரின் என்பவர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 73 வயதான ஜான்பிரின் அவர்களுக்கு கடந்த 17ஆம் தேதி கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்

இரண்டு முறை கிராமி விருது பெற்ற அவருடைய மறைவை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி குறித்து ஏன் விவாதம் எழுப்பப்படுகிறது???

கொரோனா நிவாரண நிதிக்காக, மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் அடுத்த ஒரு ஆண்டிற்கு 30 விழுக்காடு குறைத்திருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்காக உருவாக்கப்பட்ட புதிய மருத்துவமனைகள்!!!

கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 1 லட்சத்து 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 83 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

மதுவை டோர் டெலிவரி செய்ய அரசு முடிவு: அதிரடி அறிவிப்பு 

கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்களை டோர் டெலிவரி

வீடு தேடி வரும் காய்கறிகள்: சென்னை மாநகராட்சியின் சூப்பர் திட்டம்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும், ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் சென்னை பொதுமக்கள் பலர் அத்தியாவசியமான தேவையான காய்கறிகள் வாங்குவதற்கு

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எத்தனை பேர்? அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 50க்கு மேல் அதிகரித்து வரும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்