close
Choose your channels

சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் இன்னொரு நடிகர்!

Sunday, May 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகர் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபு மற்றும் ராம்குமார் ஆகிய இருவருமே திரைப்படங்களில் நடித்து உள்ளனர் என்பது தெரிந்ததே. பிரபுவின் மகன் விக்ரம் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். அதேபோல் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தநிலையில் ராம்குமாரின் இன்னொரு மகன் தர்ஷன் என்பவரும் தற்போது சினிமாவில் நடிக்க உள்ளார். அவர் நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.