தோனிதாங்க பெரிய சூப்பர் ஸ்டார்- இப்படி சொன்னது யார் தெரியுமா???

 

இந்திய கிரிக்கெட் அணியின் லெஜண்டாக கருதப்படும் தோனி சில ஆண்டுகளாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகியிருக்கிறார். இந்த ஆண்டு பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்தப் போட்டியிலும் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில் ரசிகர்கள் ஐபிஎல் விளையாட்டில் மட்டுமே அவரைப் பார்க்க முடியும் என்ற எதிர்ப்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் வீட்டில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் வீடியோ கான்பரன்சில் பேசிக்கொண்டும் டிவிட்டரில் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டும் வருகின்றனர். அப்படி ஜிம்பாவ்பே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான போமி பாங்வாவுடன் வீடியோ சேட்டில் ஈடுபட்ட டிவைன் பிராவோ, நம்ம தோனிய புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியின் வீரரான டிவைன் பிராவோ கடந்த 2011 இல் இருந்து இந்திய ஐபிஎல் விளையாட்டு போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் சிஎஸ்கே சார்பாக விளையாடும் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2011  இல் இருந்து சிஎஸ்கே விற்காக 104 போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் 121 விக்கெட்டுகளை குவித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது, 2013-2015 ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரரும் இவர்தான். இவர் தற்போது எங்கள் அணியின் கேப்டன் யார் தெரியுமா? அவர் எப்படிப் பட்டவர் என்று தெரியுமா? என்கிற ரீதியில் தோனி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

“கிரிக்கெட்டை பொறுத்தவரை மிகப் பெரிய சூப்பர்ஸ்டார் தோனிதான். எங்கள் அணியிலும் அப்படித்தான். அவருடன் மிகச் சுலபமாக உங்களால் பேச முடியும். கிரிக்கெட் களத்துக்கு வெளியே வீடியோ கேம் விளையாடிக் கொண்டு மிக கேஷவலாக இருப்பார் தோனி. அவர் அறையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். நீங்கள் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஆனால் தோனிதான் அவர்களில் எல்லோர்களிலும் மிக தன்னடக்கம் உடையவர். சிஎஸ்கே ஒரு ஸ்பெஷல் அணி. எங்களுக்குத்தான் மிக நம்பிக்கையான ரசிகர்கள் உள்ளனர்” என்றும் பிராவோ பெருமைப் பட்டுக்கொண்டு இருக்கிறார்.  

மேலும், ”சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பெரும் பங்கு தோனி மற்றும் ஃபிளமிங்கையே சாரும். அந்த வகையில் அணியின் வீரர்கள் ஃபிளெமிங்கையும் தோனியையும் முழுமையாக நம்புகிறார்கள். மற்ற வீரர்களும் தோனி மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள்” என டிவைன் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.  இந்த சுவாரசியமான கருத்துகளை தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாக பகிரிந்து வருகின்றனர். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது கூட இப்படி வீரர்கள் உணர்வு பூர்வமான கருத்துகளை பகிரிந்து கொள்வார்களா எனத் தெரியாது. ஆனால் கொரோனா நேரத்தில் அனைத்து ஆளுமைகளும் மனம் திறந்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர் என்பதும் பாராட்டுக்குரியது.

More News

புதிய வைரஸால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு: என்ன நடக்கிறது சீனாவில்?

சீனாவிலுள்ள வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் சீனா முழுவதும் மிக வேகமாக பரவி அந்நாட்டில் பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தியது.

தளபதி விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்த வைத்த 21 பிரபலங்கள்

தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதிக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை சமூக வலைதளங்கள் மூலம் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்

இந்த அறிகுறி இருந்தாலும் உங்களுக்கு கொரோனாவாக இருக்கலாம்!!! அதிர்ச்சியூட்டும் புதுத் தகவல்!!!

கொரோனா நோய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது அறிகுறிகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவால் மறைந்த தொண்டருக்கு கமல்ஹாசனின் வீரவணக்கம் கவிதை

கொரோனாவால் பலியான தனது கட்சியின் தொண்டருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் அவர்கள் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்

தமிழகத்தில் மீண்டும் உச்சம் பெற்ற கொரோனா: சென்னையில் மட்டும் 1487 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1989ஆக