இந்தியாவில் பச்சை பூஞ்சை தொற்று பாதித்த முதல் நபர்.....! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி....!

நாட்டிலே முதன் முதலாக பச்சை பூஞ்சை தொற்று மும்பையில் உள்ள ஒரு நபருக்கு பாதித்துள்ளதால், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் கோரதாண்டவம் ஆடி, பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது. இதையடுத்து கருப்பு பூஞ்சை தொற்று என்ற நோய் பரவ, இதனால் பல நபர்கள் உயிரிழந்தனர். ஆம்போடெரிசின் என்ற மருந்தை இந்நோய்க்காக சிகிச்சையளிக்க பயன்படுத்தி வந்தாலும், அதிகபட்ச நபர்களை இந்த கொடும் தொற்று காவு வாங்குகிறது. மூக்கு, கண்கள் உள்ளிட்டவற்றை பாதித்து, இறுதியாக மூளைக்கு சென்று உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இந்த மருந்திற்கும் தற்போது தமிழகத்தில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதன் பின் வெள்ளைப்பூஞ்சை தொற்று என்ற நோய் பரவ துவங்கியதில், கருப்பு பூஞ்சையை விட இது ஆபத்தானது என மருத்துவர்கள் கூறினர். இந்த நோய்களுக்கான சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையிலே, மஞ்சள் பூஞ்சை என்ற அடுத்த தொற்று பரவ தொடங்கியது. சர்க்கரை நோய், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களை தான் இந்நோய் தாக்குகின்றது. இந்த வகை பூஞ்சை தொற்றுகளுக்கு முக்கியமாக சுத்தமின்மை, அழுகிய மற்றும் பூஞ்சை உள்ள காய்கறிகள், பழங்களை உண்பது, வீடுகளில் நீர் தேங்கி சுகாதாரம் இல்லாமல் இருப்பது போன்றவற்றை காரணமாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். சில நாட்களுக்கு முன் இந்த மூன்று பூஞ்சை தொற்றும் பாதித்த நபர், உத்திரபிரதேச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்பு அவரின் உடல்நிலை குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில், இந்தூர் என்ற நகரில், அரவிந்தோ மருத்துவமனையில் விஷால் என்ற நபர் காய்ச்சலால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதித்து பார்த்ததில் இவருக்கு பச்சை பூஞ்சை தொற்று இருப்பது உறுதியானது.

காய்ச்சல் இருந்த 34 வயதே நிரம்பிய விஷாலுக்கு, சென்ற ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தாலும், அவருடைய 90% நுரையீரல் பாதிப்படைந்து விட்டது. இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் கருப்பு பூஞ்சை தொற்றாக இருக்குமோ என பரிசோதித்து பார்த்ததில், பச்சை பூஞ்சை தொற்று இருப்பது உறுதியானது. இதை ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் கழகத்தின்தலைவர் டாக்டர் ரவி தோசி அவர்கள் தான் பரிசோதனை செய்து பார்த்து உறுதி செய்தார்.தொடர் சிகிச்சைக்குப்பின் நோயாளிக்கு காய்ச்சல் 103 டிகிரிக்கு கீழ் குறையாமல், வெவ்வேறு அறிகுறிகள் தோன்ற துவங்கின. இந்நிலையில் தீவிர சிகிச்சைக்காக இவர் மும்பைக்கு, விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.