திருமணம் நடந்தபோது மணமகளின் படுக்கையறை காட்சியை திரையிட்ட மணமகன்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Friday,January 03 2020]

திருமணம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணமகளின் படுக்கை அறை காட்சியின் வீடியோவை மணமகனே திரையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தென்கிழக்கு சீனாவில் உள்ள பூஜ்யான் என்ற பகுதியில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது. மணமகன், மணமகள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் திருமண மேடையில் கூடியிருந்தனர். மணமகன், மணமகள் ஆகிய இருவரும் மண மேடைக்கு வந்தபோது திடீரென ஒரு வீடியோ அவர்களுக்கு பின்னால் இருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டது.

அந்தத் திரையில் மணமகள் வேறு ஒருவருடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருந்தன. இதனால் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து இந்த வீடியோவை மணமகனே திரையிட்டதாக கூறப்பட்டது. இதனை ஒப்புக்கொண்ட மணமகன் பின்னர் இதுகுறித்து விளக்கம் கூறியபோது ’தன்னை மணக்க இருக்கும் மணமகள் அவருடைய சகோதரி கணவருடன் நெருக்கமாக இருந்ததாக தனது நண்பர்கள் கூறியதாகவும், இதனையடுத்து அவருக்கு தெரியாமல் பதிவு செய்யப்பட்ட ரகசிய காட்சி தான் இந்த வீடியோ என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ளும் இந்தப் பெண் ஒரு மோசமான பெண் என்பதை அனைவரும் முன் நிரூபிப்பதற்காகவே அவரது அறையில் ரகசிய கேமரா வைத்து இந்த வீடியோவை பதிவு செய்ததாகவும் தன்னை திருமணம் செய்யும் பெண்ணை பழிவாங்க வேண்டும் என்ற தனது நோக்கம் நிறைவேறி விட்டதாகவும் அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை பார்த்த மணமகள் கையில் வைத்திருந்த பூச்செண்டை மணமகன் மீது வீசி எறிந்து விட்டு வேகமாக வெளியேறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.