பங்குச்சந்தை கட்டிடத்தின் 30வது மாடியில் இருந்து குதித்த ஜிஎஸ்டி கண்காணிப்பாளர்!

  • IndiaGlitz, [Tuesday,May 14 2019]

மும்பை பங்குச்சந்தை கட்டிடத்தின் 30வது மாடியில் இருந்து ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் ஹரீந்தர் கபாடியா என்றா 51 வயது நபர் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த சில மாதங்களாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் அவர் கடந்த எட்டு மாதங்களாக பணிக்கு வரவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் அவர் மும்பை பங்குச்சந்தையின் 30வது மாடியில் இருந்து குதித்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மும்பை போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
 

More News

கமல் மீது டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு: கிரிமினல் நடவடிக்கை எடுக்க மனு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேலைக்கு 996, உடலுறவுக்கு 669: அலிபாபா நிறுவனரின் ஐடியா!

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்று அலிபாபா. சீன தொழிலதிபர் ஜாக் மா நிறுவனராக உள்ள இந்த நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு அபார வளர்ச்சியை பெற்று வருகிறது

பேசுவதற்கு முன் சிந்தித்து பேச வேண்டும்: கமல்ஹாசனுக்கு பிரேமலதா அறிவுரை

இந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாசன் பேசிய கருத்து சர்ச்சைக்குரியதாக மாறி இந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது. கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, புகழேந்தி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள்

விஜய்யை இயக்கப்போகும் அடுத்த மூன்று இயக்குனர்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,

சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

தமிழ் சினிமாவின் இரண்டு மாஸ் நடிகர்களான அஜித், விஜய் படங்களுக்கு இணையாக நடிகர் சிவகார்த்திகேயனின் படங்களும் மாஸ் ஓப்பனிங் வசூல் பெற்று வருகிறது.