மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி காட்சிகள் நீக்கம்! தயாரிப்பாளர் திடீர் முடிவு

  • IndiaGlitz, [Friday,October 20 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்கள் படத்தின் ஹைலைட்டாக இருந்தது. ஆனால் இந்த வசனத்திற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் வழக்கு போடுவதாக எச்சரித்தார். மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனும், தேசிய செயலாளர் எச்.ராஜாவும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஆனால் காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் இந்த வசனத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் 'மெர்சல்' தயாரிப்பாளர் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அவர்களிடம் தொலைபேசியில் சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'மெர்சல்' தயாரிப்பாளரின் இந்த முடிவால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பது அவர்கள் பதிவு செய்து வரும் டுவீட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது.

More News

எல்லைகளை தாண்டி மெர்சலுக்கு குவியும் பாராட்டுக்கள்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் கதை ஒருசில பழைய படங்களின் காப்பி என்று விமர்சனம் செய்யப்பட்டாலும் விஜய் ரசிகர்கள் மற்றும் நடுநிலை ரசிகர்களின் பேராதரவால்

'காலா' ரிலீஸ் எப்போது? இயக்குனர் பா.ரஞ்சித் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: எச்.ராஜா

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு ஏற்கனவே பாஜக தலைவர்களான தமிழிசை செளந்திரராஜன், பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துவிட்ட நிலையில் எச்.ராஜா

ஜிஎஸ்டிக்கு எதிரான 'மெர்சல்' வசனம் சரியா? தவறா?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் பல சோதனைகளை சந்தித்த நிலையில் தற்போது ரிலீசுக்கு பின்னரும் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

மெர்சலுக்கு எதிரான தமிழிசையின் கருத்து ஜனநாயக விரோதம்: திமுக பிரமுகர் கருத்து

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் காட்சிகளை நீக்க கோரி தமிழிசை செளந்திரராஜன் கருத்து தெரிவித்திருப்பது ஜனநாயக விரோதத்தின் உச்சகட்டம் என்று திமுக பிரமுகர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.