close
Choose your channels

கின்னஸ் சாதனை படைத்த ரஜினி பட தயாரிப்பாளர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

Tuesday, February 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினி நடித்த திரைப்படங்கள் மற்றும் கின்னஸ் சாதனை திரைப்படம் ஆன 'சுயம்வரம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக திரையுலகை சேர்ந்தவர்கள் காலமாகி வருவது திரை உலகினர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், பிரபல இயக்குனர் டிபி கஜேந்திரன், பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ், இயக்குனர் கே விஸ்வநாத், நடிகை ஜமுனா, குனசித்திர நடிகர் இ ராமதாஸ் உள்ளிட்ட திரையுலகினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான திரையுலக பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடித்த காளி’ ’கர்ஜனை’ ஆகிய திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஹேம்நாத் பாபுஜி என்பவர் இன்று காலமானார். இவர் கின்னஸ் சாதனை திரைப்படமான ‘சுயம்வரம்’ என்ற படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

‘சுயம்வரம்’ திரைப்படத்தை 14 இயக்குனர்கள் 19 ஒளிப்பதிவாளர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட பிரபல நடிகர்கள் நடித்திருந்தார்கள் என்பதும் இந்த படம் 24 மணி நேரத்திற்கு படமாக்கப்பட்டு முடிந்தது என்ற கின்னஸ் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மறைந்த தயாரிப்பாளர் ஹேம்நாக் பாபுஜி அவர்களுக்கு திரையுலகினர் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.