close
Choose your channels

14 வயதில் மகள் இருக்கும்போது மீண்டும் அப்பாவான கின்னஸ் சாதனை நடிகர்.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..!

Saturday, March 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நகைச்சுவை நடிகர் பக்ருவுக்கு ஏற்கனவே 14 வயதில் மகள் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் அவர் அப்பாவாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜீவா நடித்த ’டிஸ்யூம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகர் பக்ரு. அதன் பிறகு அவர் ’அற்புத தீவு’ ’தலை எழுத்து’ ’காவலன்’ ’ஏழாம் அறிவு’ உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் பக்ரு கடந்த 2006ம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த மகள் தற்போது 14 வயதாக இருக்கும் நிலையில் மீண்டும் பக்ரு தந்தையாகியுள்ளார். தற்போது பிறந்த குழந்தையை கையில் ஏந்தியவறு தனது 14 வயதான மகளுடன் பக்ரு இருக்கும் புகைப்படம் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் பக்ரு உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த நடிகர் என்ற கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.