துப்பாக்கிக் காட்டி லைவ் நிகழ்ச்சியில் கொள்ளை? வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,February 23 2021]

வங்கிக் கொள்ளைகளில் துப்பாக்கி பயன்படுத்தப் படுவதைப் பார்த்து இருப்போம். ஆனால் முதல் முறையாக தென் அமெரிக்காவில் தொலைக்காட்சி ஒன்றிற்காக எடுக்கப்பட்ட லைவ் நிகழ்ச்சியில் துப்பாக்கி காட்டி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தென் அமெரிக்கா நாடான ஈக்வடாரில் Sky News எனும் விளையாட்டு நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. இந்தத் தொலைக்காட்சியின் நிரூபர் டியாகோ ஓர்டினோலா என்பவர் கடந்த 19 ஆம் தேதி தனது கேமரா குழுவோடு சேர்ந்து குவாயாகி எனும் பகுதிக்கு அருகே உள்ள Esadia monument எனும் விளையாட்டு அரங்கத்தைக் காட்டி எதோ ஒரு தகவலை மும்முரமாக சொல்லிக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் முகக்கவசம் அணிந்த ஒரு மர்ம நபர் துப்பாக்கி எடுத்துக் கொண்டு நிரூபரைக் காட்டி மிரட்டுகிறார்.

முக்கத்துக்கு அருகே துப்பாக்கி இருப்பதை பார்த்த நிரூபர், மைக்கைக் நீட்டி அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இதனால் பக்கத்தில் இருந்த கேமரா குழுவிடம் பாய்ந்த கொள்ளையன் உங்களிடம் இருக்கும் செல்போன் அல்லது பணத்தைக் கொடுங்கள் என மிரட்டுகிறார். இதனால் பயந்து போன கேமராமேன் ஒரு செல்போனை கொடுக்கிறார். அதை வாங்கிக் கொண்ட கொள்ளையன் இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவருடன் தப்பித்துச் சென்றுவிட்டார். இந்தக் காட்சிகள் அனைத்தும் தற்போது லைவ் நிகழ்ச்சியில் பதிவாகி இருப்பதோடு அது சமூக வலைத்தளத்தில் வைரலாகியும் வருகிறது.