கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்: காவல்துறை அதிரடி நடவடிக்கை

  • IndiaGlitz, [Monday,July 27 2020]

கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க முருக பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் நிர்வாகி சுரேந்திரன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள 500 வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கினார்கள் என்பதும் இந்த சேனலை தடைசெய்ய யூடியூப் நிர்வாகத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து கடிதம் எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கறுப்பர் கூட்டம் சேனலின் நிர்வாகி சுரேந்திரனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தனர், இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் அடிப்படையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கந்தசஷ்டி விவகாரத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுரேந்திரன் மீது தற்போது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

நீண்ட நாள் காதலருடன் நிச்சயதார்த்தம்: சர்ச்சைக்கு பேர்போன கவர்ச்சி நடிகையால் பரபரப்பு

பிரபல கவர்ச்சி நடிகையும், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான வீடியோ, புகைப்படங்களை பதிவு செய்து அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருபவருமான பூனம்பாண்டே தனது நீண்ட நாள் காதலரை திருமணம்

அசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலா??? விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் கவலை!!!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதாகப் பரபரப்பு கிளம்பியது.

நான் பாஜகவில் இணைந்ததிற்கு ரஜினி ஒரு முக்கிய காரணம்: பிரமிட் நடராஜன்

கடந்த சில மாதங்களாக பாஜகவில் சினிமா பிரபலங்கள் இணைவதும் அவர்களுக்கு பாஜகவில் பொறுப்புகள் அளிக்கப்பட்டு வருவதுமான செய்திகள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.

சரித்திரம்‌ படித்திருந்தால்‌ இதெல்லாம் புரிந்திருக்கும்: விவசாயிகளுக்கு ஆதரவாக கமல்ஹாசன் அறிக்கை

உலகநாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆக்கபூர்வமான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில்

இந்தியாவில் பயங்கரவாத அமைப்புகளா??? ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

இந்தியாவின் கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இருப்பதாக ஐ.நா. சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறது.