close
Choose your channels

'எவனென்று நினைத்தாய்' டைட்டில் இல்லை: உண்மையான டைட்டில் இதுதான்!

Friday, September 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தின் அறிவிப்பில் ’எவனென்று நினைத்தாய்’ என்ற ஹேஷ்டேக் இருந்ததால் பலரும் இந்த திரைப்படத்தின் டைட்டில் ’எவனென்று நினைத்தாய்’ என்றுதான் நினைத்தனர்.

ஆனால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரங்களில் ’எவனென்று நினைத்தாய்’ என்பது இந்த படத்தின் டைட்டில் இல்லை என்றும், ‘கமல்ஹாசன் 232’ என்றே இப்போதைக்கு இந்த படம் அழைக்க்ப்படும் என்றும் இந்த படத்தின் உண்மையான டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் கசிந்து வரும் செய்திகளின் அடிப்படையில் இந்த படத்தின் உண்மையான டைட்டில் ’குரு’ என்று கூறப்படுகிறது. கடந்த 1980 ஆம் ஆண்டில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் ஐவி சசி இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படம் ’குரு’. இந்த திரைப்படத்தின் டைட்டிலை கமலஹாசன் தனது 232வது படத்திற்கும் டைட்டிலாக தேர்வு செய்து இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடித்த படத்திற்கு ’குரு’ என்ற டைட்டில் தான் வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.