close
Choose your channels

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோ

Saturday, September 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'தலைவர் 165' திரைப்படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக் உள்பட பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு ஹீரோ நடித்துள்ளார். அவர்தான் குரு சோமசுந்தரம்

'ஜோக்கர்', 'ஓடு ராஜா ஓடு' உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது ரஜினி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இணைந்துள்ளார். இந்த படத்தில் பிரபலங்களின் இணைப்பு அதிகரித்து கொண்டே போவதால் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது.

சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இரண்டுகட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.