close
Choose your channels

ஜிவி பிரகாஷ்-ஆதிக் படம் 'நித்தியானந்தா' கதையா?

Sunday, September 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் 'காதலை தேடி நித்யா நந்தா' என்பதை நேற்று பார்த்தோம்.

இந்த படத்தின் டைட்டில் வெளிவந்ததில் இருந்து இந்த படத்தின் கதை சாமியார் 'நித்யானந்தா' கதை என சமூக வலைத்தளத்தில் வதந்திகள் பரவியது. இதனையடுத்து இயக்குனர் ஆதிக் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இந்த படத்தின் கதை 'நித்தியானந்தா' சம்பந்தப்பட்டது அல்ல என்றும், இந்த படத்தின் நாயகி அம்ரியாவின் கேரக்டர் நித்யா என்றும், நாயகன் ஜிவி பிரகாஷ் கேரக்டர் நந்தா என்றும் அதனை வைத்தே டைட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கமளித்துள்ளார்.

மேலும் இதுவொரு ரொமான்ஸ் கலந்த த்ரில் படம் என்றும் 'அனேகன்' படத்திற்கு பின்னர் அம்ரியாவுக்கு கிடைத்த வித்தியாசமான கேரக்டர் என்றும் இயக்குனர் ஆதிக் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்திலும் முத்தக்காட்சி உள்பட ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும் என்றும் வசனங்களும் இளைஞர்களுக்கு பிடித்தவாறு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

யோகிபாபு, விடிவி கணேஷ், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை தினேஷ் கார்த்திக் தயாரிக்க, லால்குடி இளையராஜா கலை இயக்குனராக பணிபுரிகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.