close
Choose your channels

ஜிவி பிரகாஷின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்!

Friday, August 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் நடிப்பு, இசை என இரண்டு துறைகளிலும் பிசியாக இருக்கும் ஜிவி பிரகாஷ் தற்போது ஐங்கரன், 100% காதல், அடங்காதே, சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெயில், 4ஜி, காதலை தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை, என ஒரு பெரிய பட்டியல் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் எழில் இயக்கி வரும் படம் ஒன்றிலும் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பான இந்த படத்தில் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக ஈஷா ரெபா நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால், நிகிஷா பட்டேல், சதீஷ், உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் ஞாயிறு வெளியாகும் என படக்குழுவினர் சற்றுமுன் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏற்கனவே 'ஆயிரம் ஜென்மங்கள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அந்த செய்தி உண்மையா? என்பது ஞாயிறு அன்று தெரிந்துவிடும். மேலும் 'ஆயிரம் ஜென்மங்கள்' என்ற டைட்டிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1978ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.