close
Choose your channels

ஒருத்தன் வாழணும்ன்னா இன்னொருத்தன் சாகணும்: ஜிவி பிரகாஷின் '13' டீசர்

Thursday, October 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘13’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக உள்ள இந்த டீசரில் பல த்ரில்லிங் காட்சிகள் இருப்பதால் ‘டார்லிங்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு த்ரில் கதையம்சம் கொண்ட படமாக ஜிவி பிரகாஷ்க்கு இந்த படம் அமைந்துள்ளது என்பது தெரியவருகிறது.

ஜீவி பிரகாஷ், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஆதித்யா கதிர், ஐஸ்வர்யா உட்பட பலர் நடித்துள்ளனர். விவேக் இயக்கத்தில், சித்துகுமார் இசையில், மூவேந்தர்ஒளிப்பதிவில் காஸ்ட்ரோ படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

மெட்ராஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.