ஜிவி பிரகாஷை பிரிகிறேன்.. 11 ஆண்டு திருமண பந்தம் முறிந்ததாக சைந்தவி அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி பாடகி சைந்தவி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்து இருப்பதாகவும், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம்.
இந்த செய்திக்கு இருவரும் தங்கள் தரப்பிலிருந்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததை அடுத்து இந்த செய்தி உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் பாடகி சைந்தவி தனது சமூக வலைத்தளத்தில் ஜிவி பிரகாஷை பிரிவதை உறுதி செய்துள்ளார். அவர் அந்த அறிவிப்பில் ’நீண்ட யோசனைக்கு பிறகு திருமணம் ஆன 11 ஆண்டுகளுக்கு பிறகு நானும் ஜிவி பிரகாஷும் பிரிய முடிவு செய்துள்ளோம், ஒருவரை ஒருவர் பரஸ்பர மரியாதையை பேணுவதன் மூலம் எங்களது மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக ஆழமான யோசனைக்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவு.
மேலும் எங்கள் தனி உரிமையை புரிந்து கொண்டு ஊடகங்கள் மற்றும் நண்பர்கள் மதிப்பு கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இருவரும் பிரிந்து இருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம். இது ஒருவருக்கு ஒருவர் எடுத்த சரியான முடிவு என்று நாங்கள் நம்புகிறோம், இந்த கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவு எங்களுக்கு தேவை’ என்று பதிவு செய்துள்ளார்.
இதேபோல் ஜிவி பிரகாஷும் தனது சமூக வலைத்தளத்தில் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்துள்ளார்.
— Saindhavi (@singersaindhavi) May 13, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments