ஜிவி பிரகாஷ்- சீனுராமசாமி படத்தின் அதிரடி டைட்டில் இதுதான்!

  • IndiaGlitz, [Wednesday,August 11 2021]

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் ஜோடியாக காயத்ரி நடித்து வருவதாகவும் மேலும் நடிகர் சௌந்தரராஜன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் ’இடிமுழக்கம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இயக்குனர் சீனுராமசாமி ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை கையில் எடுத்துள்ளார் என்றும் இந்த படம் அதிரடி ஆக்சன் படம் என்றும் கூறப்படுகிறது. ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்கும் இந்தப் படம் சீனு ராமசாமியின் மற்ற படங்களைப் போல் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.