'என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியலை'.. ஜிவி பிரகாஷின் 'அடியே' டிரைலர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஜிவி பிரகாஷ் நடிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவான ‘அடியே’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அடியே’. இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஜிவி பிரகாஷ், வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில், கோகுல் பினாய் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் அந்த படத்தின் டிரைலர் வித்தியாசமாக உள்ளது.
ஹீரோ ஜிவி பிரகாஷுக்கு திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக அவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறி வருகிறது. தான் இருக்கும் உலகமே வேறு என்று அவர் நினைக்கும் அளவுக்கு பல வித்தியாசமான சம்பவங்கள் நடக்கிறது. இந்த நிலையில் அவர் கவுரி கிஷானை காதலிக்க இந்த காதல் நிறைவேறியதா? என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பது ‘அடியே’ படத்தின் ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.
முற்றிலும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட அதே நேரத்தில் காமெடி மற்றும் ரொமான்ஸ் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படம் ஜிவி பிரகாஷின் இன்னொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Best wishes team #Adiyae here is the trailer @gvprakash @vikikarthick88 @Maaliandmaanvi @Gourayy @vp_offl https://t.co/SAjwh7joAw
— Dhanush (@dhanushkraja) August 8, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments