பிரபல இயக்குனரின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,August 10 2020]

ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்து வரும் படங்களில் ஒன்றான ‘ஜெயில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது

நடிகர் தனுஷ் பாடிய ’காத்தோட காத்தானேன்’ என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

‘ஜெயில்’ படத்தின் ‘பத்து காசு’ என்று தொடங்கும் இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதியுள்ளார். பிரெண்ட்ஷிப் ஆன்ந்தமாக உருவாகியிருக்கும் இந்த பாடல் வரும் 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ‘ஜெயில்’ படத்தில் ஜிவி பிரகாஷ், ராதிகா, ரோனிட் ராய், கவுதம் குலாட்டி, சுதன்ஷூ பாண்டே, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், சூரி, ரோபோ சங்கர், பாபிசிம்ஹா, பிரேம்ஜி அமரன், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மூணாறு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!!!

கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை அடுத்த ராஜமலா, பெட்டிமாடா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31

6 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!!! 6 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தும் போலீஸ்!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் விளையாட்டிக் கொண்டிருந்த 6 வயது குழந்தையை மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை

மீராமிதுன் இத்தோடு நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்: இயக்குனர் பாரதிராஜாவின் காட்டமான அறிக்கை

கடந்த சில நாட்களாக எல்லை மீறி நடிகை மீராமிதுன் தனது சமூக வலைத்தளத்தில் மாஸ் நடிகர்கள் குறித்து கருத்து கூறி வருகின்றனர். அவர்களுடைய குடும்பத்தினர் குறித்தும் கொச்சையாக பேசி வருகின்றார்.

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கொரோனாவால் பலி: திரையுலகினர் அதிர்ச்சி

தமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்

என்ன ஒரு ஹீரோ, என்ன ஒரு ஸ்டைல்: விஜய் குறித்து அஜித்துக்கு நெருக்கமான வீராங்கனை

இந்தியாவின் மோட்டார் பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துலா நடிகர் அஜித்துக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதும் அஜித்தும் அலிஷாவின் தந்தையும் ஒரே மோட்டார் சைக்கிள் ரேஸில் பங்கு கொண்டனர்