'வாழ்க்கை ஒரு வாய்ப்பு கொடுத்துச்சு, அதை விட்ற கூடாதுன்னு முடிவு பண்ணினேன்: 'கள்வன்' டீசர்

  • IndiaGlitz, [Friday,January 13 2023]

ஜிவி பிரகாஷ் நடித்த ‘கள்வன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

ஜிவி பிரகாஷ் மற்றும் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் சங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் காடு மற்றும் காடு சார்ந்த பகுதிகளில் நடக்கும் த்ரில் சம்பவங்களுடன் கூடிய கதையம்சம் கொண்டது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை சமீபத்தில் நடிகர் தனுஷ் வெளியிட்டார். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

காட்டுப்பகுதியில் நடக்கும் மயான கொள்ளை உள்பட பல மர்மமான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் அந்த சம்பவங்களை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையில் இறங்குவது தான் இந்த படத்தின் கதை என டீசரில் இருந்து தெரிய வருகிறது.

‘லவ் டுடே’ நாயகி இவானா இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெளியே அனுப்பிவிடுவேன்... உள்ளே சென்ற போட்டியாளர்களை எச்சரித்த பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்.

'வாரிசு' - 'துணிவு': சென்னை, தமிழகம் மற்றும் உலக அளவிலான 2 நாள் வசூல் விபரங்கள்!

 அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக நேற்று முன்தினம் வெளியானது என்பதும் இரண்டு திரைப்படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை

'என்ன ஒரு ஆனந்தம்'... ஒரே காஸ்ட்யூமில் அஜித்-மஞ்சுவாரியர்: வைரல் புகைப்படங்கள்

அஜித்தின் 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை விறுவிறுப்பாக எந்த இடத்திலும் திரைக்கதை தொய்வு இல்லாமல்

'ரஞ்சிதமே' பாடல் மட்டுமல்ல.. 'வாரிசு' படத்தில் இதையும் செய்துள்ளார் மானஸி!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் நேற்று முன்தினம் பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே

'வாரிசு' படத்தை பாராட்டிவிட்டு அதன்பின் மன்னிப்பு கேட்ட பெண்ணின் வீடியோ: இயக்குனர் கண்டனம்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' படத்தை பாராட்டி விட்டு அதன் பின்னர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ள பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.