வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்: ஜிவி பிரகாஷ் கண்டனம்

  • IndiaGlitz, [Tuesday,May 22 2018]

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் இன்று நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான அப்பாவி பொதுமக்கள் 9 பேர்களின் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட பல கோலிவுட் திரையுலகினர்களும் இந்த சம்பவத்திற்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுத்து வரும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:

உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்கு தடை விதிக்க முடியாது என்பதால், தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.

சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்... வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்.

சுவாசிக்க தூய்மையான காற்றை கேட்டவர்களின் மூச்சை நிறுத்திவிட்டது இந்த சனநாயகம்.'

இவ்வாறு ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.