பொய் செய்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை.. ஜிவி பிரகாஷின் ஆவேச பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ரயில் பெட்டியில் தீ விபத்து நடந்ததாக யாரோ கிளப்பிவிட்ட வதந்தி காரணமாக லக்னோ - டெல்லி ரயிலில் பயணம் செய்த பயணிகள் கீழே குதித்ததால் இன்னொரு தண்டவாளத்தில் வந்த ரயில் மோதி 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு காரணமான தீ விபத்து என்று புரளி கிளப்பியவர் டீ விற்பனை செய்யும் ஒருவர் என முதல்கட்ட விசாரணை தெரியவந்துள்ளதை அடுத்து அவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் வதந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இது குறித்து ஆவேசமாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
நேற்று லக்னோ - டெல்லி இடையிலான ரயிலில் ஒரு பெட்டியில் தீ பரவியதாக யாரோ பரப்பி விட்ட பொய் தகவலை நம்பி , அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்தி விட்டு இறங்கி தப்பிக்க முயன்ற பயணிகளில் 15 க்கும் மேற்பட்டோர் எதிரில் வந்த பெங்களூரு ரயிலில் அடிபட்ட இறந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
பொய் செய்தியை பரப்பியவர்கள் மீது அரசு தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் உண்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டுகிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com