விஜய், ரஜினியை அடுத்து ஜி.வி.பிரகாஷ்?

  • IndiaGlitz, [Saturday,November 14 2015]

முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பதோடு, ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவர் நடித்த 'டார்லிங்' மற்றும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வசூல் தந்ததால், வெற்றிகரமான இசையமைப்பாளராக மட்டுமின்றி வெற்றிகரமான நாயகனாகவும் கோலிவுட்டில் வலம் வருகிறார்.

இரண்டு வெற்றி படங்களை அடுத்து ஜி.வி.பிரகாஷ் தற்போது 'புரூஸ் லீ', 'கெட்ட பையன்டா இந்த கார்த்தி', 'கைப்புள்ள' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து முடித்துள்ள 'பென்சில்' என்ற படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் 'கத்தி' படத்தை தயாரித்த 'லைகா' நிறுவனம் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ரஜினி நடிக்கவுள்ள 'எந்திரன் 2' படத்தையும் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

24ஆம் தேதி வெளியாகிறது '24' படத்தின் பர்ஸ்ட்லுக்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'படங்க 2' திரைப்படத்தின் ரிலீஸ் நவம்பரில் இருந்து டிசம்பருக்கு தள்ளிப் போனதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

உதயநிதி-ஹன்சிகா படப்பிடிப்பில் இணைந்த விவேக்

சமீபத்தில் மகனை இழந்து மீளாத்துயரில் இருந்த நகைச்சுவை நடிகர் விவேக், தற்போது தன்னுடைய...

கே.வி.ஆனந்த் படத்தில் இணையும் புதிய எழுத்தாளர்

கோ, அயன், அனேகன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்...

நடிகர் நகுல் நிச்சயதார்த்தம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமானவர் நடிகர் நகுல். இவர் நடிகை தேவயானியின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.....

இதய நோயாளியுடன் ரஜினி. ஒரு உணர்ச்சிமயமான சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....