ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்
ஒவ்வொரு ஆண்டும் அதிக தமிழ் சினிமாவில் நடித்து கொண்டும், ஒருசில படங்களுக்கு இசையமைத்து கொண்டும், ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர் ஜிவி பிரகாஷ்.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்றான 'ஐங்கரன்' திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, படத்திற்கு 'யூ' சான்றிதழும் அளித்துள்ளனர். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஆடுகளம் நரேன், யோகிபாபு, மயில்சாமி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரவி அரசு இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அதர்வா நடித்த 'ஈட்டி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையில் சானு வர்கீஸ் ஒளிப்பதிவில் ராஜா முகமது படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.