close
Choose your channels

ஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, November 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் நடிப்பு, இசை என இரண்டு துறைகளிலும் பிசியாக இருந்து வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘சிவப்பு பச்சை மஞ்சள் உள்பட இதுவரை இந்த ஆண்டு மட்டும் 5 படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஐங்கரன், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலை தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை, என ஒரு பெரிய பட்டியல் கொண்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வந்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி சற்றுமுன் ரிலீஸ் தேதியு அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ், ஈஷா ரெபா, சாக்சி அகர்வால், நிகிஷா பட்டேல், சதீஷ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருவிழா விருந்தாக வெளிவரவுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 20ஆம் தேதி சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ உள்பட ஒருசில திரைப்படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சி.சத்யா இசையில் செந்தில்குமார் ஒளிப்பதிவில், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.