close
Choose your channels

4 ஆண்டுகள் கிடப்பில் இருந்த ஜிவி பிரகாஷ் படம்: ஓடிடியில் ரிலீஸா?

Wednesday, July 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்து முடித்து நான்கு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ’ஈட்டி’ இயக்குனர் ரவி அரசு என்பவர் இயக்கிய திரைப்படம் ‘ஐங்கரன்’. கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படம் 2017 ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் அதன் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நான்கு ஆண்டுகளாக இந்த திரைப்படம் வெளிவர முடியாமல் உள்ளது

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் முன்னணி ஓடிடி ஒன்றில் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகள் கிடப்பில் இருந்த ஜிவி பிரகாஷ் திரைப்படம் தற்போது வெளியாக உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

ஜிவி பிரகாஷ் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்த இந்த திரைப்படத்தில் காளி வெங்கட், ஆடுகளம் நரேன், யோகிபாபு, மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் படத்தை காமன்மேன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.