ஜிவி பிரகாஷின் 'ரிபெல்' சென்சார் தகவல்.. ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,January 24 2024]

ஜிவி பிரகாஷ் நடித்த ‘ரிபெல்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

தமிழ் திரை உலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்பவர் ஜிவி பிரகாஷ். ஒரு பக்கம் இசையமைப்பில் பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஹீரோவாக அவர் நடித்து முடித்த படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் ‘ரிபெல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மூணாறு பகுதியில் உள்ள மக்களின் அரசியல் குறித்து பேசும் இந்த படம் இதுவரை வெளியே தெரியாத மூணாறு மக்களின் பல விஷயங்களை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக மமிதா பஜிலு என்பவர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வெங்கடேஷ், ஷாலு ரஹிம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த படத்தின் ரிலீஸ் தேதி நாளை காலை 10 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நீண்ட இடைவெளிக்கு பின் பிரபுவை சந்தித்த உடன் நடித்த நடிகைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் பிரபுவுடன் நடித்த இரண்டு நடிகைகள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

திருமணமான அவருடன் டேட்டிங் இல்லை: வேறொருவரை காதலிக்கிறேன்: கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் 'அவருக்கு திருமணம் ஆகிவிட்டது

கடும் குளிர்.. நோ மேக்கப்.. ரிஷிகேஷில் நடிகை ரம்யா பாண்டியன்..!

 நடிகை ரம்யா பாண்டியன் ரிஷிகேஷ் சென்று உள்ள நிலையில் அங்கு கடுங்குளிரில் மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

சிம்புவுக்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோன்? இன்னொரு ஹீரோயின் யார் தெரியுமா?

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் தீபிகா படுகோன் என்றும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

5வது மாதத்தில் வளைகாப்பு.. கணவருடன் ஜாலியாக ஆட்டம் போட்ட சீரியல் நடிகையின் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களை நடித்து வரும் நடிகை ஒருவர் தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் வளைகாப்பு தினத்தில்   கணவருடன் கைகோர்த்து ஜாலியாக