முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் அடுத்த படம்: விரைவில் சன் டிவியில் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Sunday,February 28 2021]

ஜிவி பிரகாஷ் நடித்த ’வணக்கம்டா மாப்பிள்ளை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அந்த படத்தின் நாயகி அம்ரிதா ஐயர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய தகவலை தெரிவித்துள்ளார்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கி வந்த திரைப்படம் ’வணக்கம்டா மாப்ள’ இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது என நாயகி அம்ரிதா ஐயர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து படக்குழுவினர்களுடனும், ஜிவி பிரகாஷூடனும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.,

சன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் சன் டிவிக்காக தயாரிக்கப்பட்டது என்பது விரைவில் இந்த படம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான டேனியல், ரேஷ்மா உள்பட பலர் நடித்துள்ளனர்.

More News

நலன்குமாரசாமியின் அடுத்த படத்தின் நாயகன் இந்த பிரபல நடிகரா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'சூதுகவ்வும்' 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. இவர் சமீபத்தில் குட்டி ஸ்டோரி

அடுத்தடுத்து வெளியாகிறதா 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்கள்?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்டமான திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே.

உதயநிதியின் அடுத்த படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்!

உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் இணைந்துள்ளதாக வந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

'பாகுபலி 2' சாதனையை முறியடித்த தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'

பிரபாஸ் நடிப்பில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி 2' படத்தின் மிகப்பெரிய சாதனையை தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

முதல்கட்ட படப்பிடிப்பே வெளிநாட்டில்.. தளபதி 65' படத்தின் சூப்பர் அப்டேட்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படமான 'தளபதி 65' திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.