சிம்புவின் 'AAA' படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிறப்பு தோற்றம்

  • IndiaGlitz, [Saturday,May 13 2017]

சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் ''AAA' எனப்படும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தின் முதல் பாகம் வரும் ரம்ஜான் திருநாளில் வெளியாகவுள்ளது என்ற அதிகாரபூர்வ தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவதுள்ளது. இந்த தகவல் சிம்புவின் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா, சனாகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

More News

ரஜினி-ஷங்கரின் '2.0: இன்று முதல் முக்கிய பணி தொடக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.

கொஞ்சமாவது அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்: 'விவேகம்' எடிட்டர் காட்டம்

நேற்று அதிகாலை 12.01 மணிக்கு தல அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீசர் வெளியாகி அனைத்து தென்னிந்திய சாதனைகளையும் தகர்த்தெறிந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்களுக்கு தலைவரின் அன்புக்கட்டளைகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த ஏப்ரல் மாதம் 12 முதல் 16 வரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்

'தளபதி 61' படத்தில் மாயாஜாலம் செய்யும் விஜய்யின் 3வது கேரக்டர்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

சென்னையில் அடுத்த வாரம் முதல் சுட்டெரிக்கும் வெயில்!

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.