பாலா-ஜோதிகா படத்தில் இணையும் பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Saturday,February 25 2017]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ள அடுத்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் தற்போது ஜி.வி.பிரகாஷின் போட்டோஷூட் நடந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே பாலா இயக்கிய 'பரதேசி' படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் முதன்முதலில் அவருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த்ப் படத்தை பாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுனமும் EON Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.