ஜிவி பிரகாஷ் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்.. ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,January 03 2024]

தமிழ் திரை உலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என இரண்டு துறைகளிலும் பிஸியாக இருப்பவர் என்றால் அது ஜிவி பிரகாஷ் மட்டுமே என்பதும் இரண்டு துறைகளிலும் அவர் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வந்த ’ரிபல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணியும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சென்சார் தகவல்களை அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ள புதிய போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகிய இந்த படம் மூணாறு பகுதியில் உள்ள மக்களின் அரசியல் குறித்து பேசி இருப்பதாகவும் இதுவரை வெளிவராத மூணாறு மக்களின் பல விஷயங்கள் இந்த படம் வெளியான பின்னர் தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பீச்சில் பிகினி போஸ்.. துஷாரா விஜயனா இவர்? ரசிகர்கள் ஆச்சரியம்..!

திரையில் குடும்பப்பாங்கான அதே நேரத்தில் அழுத்தமான கேரக்டர்களில் நடித்த நடிகை துஷாரா விஜயன் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச்சில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள

மாயாவுக்கு பிக்பாஸ் கொடுத்த சலுகை.. காண்ட் ஆகும் தினேஷ் குரூப்.. என்ன நடக்கும்?

மாயா தனது சக போட்டியாளர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் அதற்கு சக போட்டியாளர்கள் எந்த ரியாக்டும் செய்யக்கூடாது என்ற சலுகையை மாயாவுக்கு பிக் பாஸ் கொடுக்கும்

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களை கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !!

தமிழ் திரையுலகின் மாபெரும் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்கள் அனைவரையும் நினைவு கூறும் வகையில், அவர்களை கௌரவிக்கும் வகையில், Dance Don Guru Steps 2023 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம்

'பீஸ்ட்' பட நடிகருக்கு 2ஆம் திருமணம்.. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

லோகேஷ் கனகராஜ்-க்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு..!

தொடர்ந்து வன்முறை திரைப்படங்கள் இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ்-க்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.